| [Click handwritten text above to enlarge] | எது பக்குவம்? -- கா. காந்திமதி பிறப்பில் வருவது பக்குவமா இறப்பில் வருவது பக்குவமா தன்னை அறிவது பக்குவமா பிறரை அறிவது பக்குவமா வாழ்வில் கிடைப்பது பக்குவமா தாழ்வில் கிடைப்பது பக்குவமா புகழ்வில் வருவது பக்குவமா இகழ்வில் வருவது பக்குவமா பெருமையில் வருவது பக்குவமா சிறுமையில் வருவது பக்குவமா அறிவால் வருவது பக்குவமா அன்பால் வருவது பக்குவமா தெரிவில் வருவது பக்குவமா தெளிவில் வருவது பக்குவமா வயதால் வருவது பக்குவமா இயல்பாய் வருவது பக்குவமா முனைப்பில் வருவது பக்குவமா இமைப்பில் வருவது பக்குவமா பண்பால் வருவது பக்குவமா பழியால் வருவது பக்குவமா விதியால் வருவது பக்குவமா மதியால் வருவது பக்குவமா இன்பத்தில் விளைவது பக்குவமா துன்பத்தில் விளைவது பக்குவமா உண்மையில் விளைவது பக்குவமா உணர்வில் விளைவது பக்குவமா உறவில் விளைவது பக்குவமா துறவில் விளைவது பக்குவமா ஒன்றால் வருவது பக்குவமா பலவால் வருவது பக்குவமா சிந்திக்கத் தொடங்கு இப்போது பக்குவம் வருவது எப்போது |
|
0 Comments
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
AboutThis website is dedicated to the memories, values, talents and personality of Dr. K. Kanthimathi - mother, grandmother, wife, daughter, sister, friend, teacher, poet, artist, chef, and an all-round amazing and loving human being. Categories
All
|
RSS Feed