Dr. K. Kanthimathi
  • Blog
  • Tribute
  • Gallery
  • Recipes
  • Kolams
  • About



Dr. K. Kanthimathi
Mother, Grandmother, Wife, Daughter,
Sister, Friend, Teacher, Chef, Poet

இன்றைய சமூகத் தகுதிகள்

13/1/2019

0 Comments

 
Picture
[Click handwritten text above to enlarge]
இன்றைய சமூகத் தகுதிகள்
    -- கா. காந்திமதி

ஆலாய்ப் பறப்பது பணத்திற்காக
தவியாய்த் தவிப்பது தன்னலம் காக்க
தீயாய் எரிவது பொறாமை கொண்டு
நீராய்க் குளிர்வது பிறர் துன்பம் கண்டு
புழுவாய்த் துடிப்பது புற அழகு பேண
அவலாய் மெல்வது அடுத்தவர் குறைகள்
கூடிப் பேசுவது மற்றவர் கதைகள்
ஒப்பீடு செய்வதில் அறிவியல் நுணுக்கம்
பேசி நடிப்பது பிறரை மிஞ்ச
​மனத் தூய்மை பெற்று மலையாய் உயர்வது எப்போது?
0 Comments

உச்சரிப்பு வேட்டை!

13/1/2018

0 Comments

 
​​Harnessing the expressive power of Tamil in four crisp phrases, Dr. Kanthimathi makes pithy and amusing observations on the styles of contemporary youth.
Picture
​​[Click handwritten text above to enlarge]
​உச்சரிப்பு வேட்டை
    -- கா. காந்திமதி
​

​காட்ட வேண்டிய முகத்தை முடியால் பாதி மூடி
மூட வேண்டிய உடலைப் பாதி காட்டி
பேசும் ஆங்கிலம் ஓட்டை
நுனி நாக்கில் உச்சரிப்பு வேட்டை.

Translated:
The face that should be shown, half covered in hair
The body that should be covered, half shown
The English spoken so full of holes
A pronunciation hunt at the tip of the tongue!
0 Comments

Our Sun, Our Moon, Our Shining Star

9/2/2017

1 Comment

 
  -- By Arulnambi K.

Amma loved going to the beach. She liked to sit and watch the waves, the boats and the people. After one such visit on a full moon day, she wrote the following:
Picture
[ Click handwritten text above to enlarge ]
இன்று பௌர்ணமி
கடற்கரைக்குச் சென்றோம்
மணல் வெளி பார்த்தோம்
விண் வெளி பார்த்தோம்
கண்ணுக்கெட்டிய தூரம் கடல் அலை பார்த்தோம்
மேகங்கள் பார்த்தோம்
ஆகாயத்தில் விமானங்கள் பார்த்தோம்
அனைத்தும் பார்த்தோம்
அனைவரையும் பார்த்தோம்
நிலவை மட்டும் பார்க்கவில்லை

Translated:
Today is a full moon day
We went to the beach
We saw the sand and the sky
We saw the ocean, stretching as far as the eye could see
We saw the clouds and the planes high up in the sky
We saw everything, and everybody
We did not see the moon, though (on this full moon day)

Today, February 9, it has been two years since Amma left behind her family and this world, and departed forever into the heavens. She was our sun, our moon, our shining star, and not a day goes by without her permeating my thoughts, the way I think and even the way I act. She will forever be the missing moon on my full moon days.
1 Comment

நாவன்மை

5/11/2016

0 Comments

 
Picture
[Click handwritten text above to enlarge]
நாவன்மை
  -- கா. காந்திமதி

நாவில்லையெனில் பேச்சில்லை
பேச்சில்லையெனில் பேதமில்லை
நாவில்லையெனில் சுவையில்லை
சுவையில்லையெனில் உணவில்லை
உணவில்லையெனில் உடலில்லை
உடலில்லையெனில் உயிரில்லை.
0 Comments

மனிதா, உன் நிலை?

14/4/2016

1 Comment

 
Picture
[Click handwritten text above to enlarge]
மனிதா, உன் நிலை?
    -- கா. காந்திமதி

மனிதா, நீ
சூல் நிலைக் கைதியாய்த் தொடங்கி
மரபுக் கைதியாய் வளர்ந்து
சூழ்நிலைக் கைதியாய் முடிவாயா?

The beauty of the Tamil language lies in its brevity. Dense ideas can be expressed with just a handful of words by a skilled writer. The above poem by Dr. Kanthimathi is one such creation. In just eleven words, it postulates the ultimate futility of human existence by tracing its progress through life's beginning, development and end. Here is an attempt at a translation that tries to do justice to the word play and the brevity:

O Human! Will you...
Begin as a captive in the womb,
Grow as a captive of convention,
And end as a captive of circumstance?
1 Comment

Into the Maelstrom

19/12/2015

0 Comments

 
  -- By Arulnambi K.

Amma was only 4 feet and 7 inches tall, physically frail even when she was young, and generally not an example of what a rugged and healthy physique would be. In 2010, when she was 63, she was diagnosed with colon cancer. She kept the news of her ailment very private and only a few people knew about it. She did not want to attract fuss and attention, and thought that she would feel sicker if people kept calling or visiting to see how she was doing. Cancer treatment is generally grueling, to say the least, but she went through two rounds of it in the next three years. She once told me that it was sheer willpower and not physical strength that got her through two surgeries in two years followed by several rounds of adjuvant chemotherapy. She had only my father by her side through most of this treatment.

வாழ்வின் எல்லை இதுதானோ?

பேரனின் பிறந்த நாள்
மகனின் பிறந்த நாள்
மனம் மகிழ்ந்தது
உடல்?

பகலா இரவா தெரியவில்லை
உணவும் நீரும் பிடிக்கவில்லை
படுக்கையா இருக்கையா தெரியவில்லை
கனவா நனவா புரியவில்லை
மனிதர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை
குரல்கள் எதுவும் கேட்கவில்லை
சுற்றுச் சூழல் உணரவில்லை
உறக்கமும் விழிப்பும் அறியவில்லை
வலியும் குமட்டலும் பிரதானம்
வாழ்வின் எல்லை இதுதானோ?
Is this the edge of life?

Grandson’s birthday...
Son’s birthday...
The mind rejoices.
The body?

Day or night, I know not
Food and water, I hate
Bed or seat, I know not
Dream or reality, I cannot discern
Humans, I do not see
Voices, I do not hear
Surroundings, I cannot feel
Sleep and waking, I know not
Pain and nausea permeate.
Is this the edge of life?

Last year (2014), Amma's cancer was back, and she knew it. She skipped her regular schedule of medical checkups with her surgeon and oncologist, knowing that she could not go through yet another round of treatment. She had decided not to seek treatment if the cancer came back again, but kept her condition and this decision to herself. As the pain started and she weakened steadily as the year progressed, she was able to anticipate her end months in advance. As she was wont to do, Amma started to plan for it to the extent that she could. She went into her twilight not wanting to trouble her loved ones, but with courage, dignity and a pained melancholy which will linger in my mind forever. 

​வலியும் வேதனையும்

வலிகளைத் தாங்கித் தாங்கி வாடிப் போனது உடல்
வேதனைகளைச் சுமந்து வெற்றிடமானது மனம்
என் வலிகளும் வேதனைகளும் என்னோடு போகட்டும்
என் குடும்பம் நலம் பெற்று வாழட்டும்.
Pain and Suffering

The body wilts from bearing all the pain
The mind has become barren from bearing the suffering
Let my pains and sufferings depart with me
Let my family be blessed and live well.

In December 2014, I happened to go to India to deal with an emergency at work, and got to visit my parents. Amma's condition was a jolt. I decided to go back to India on family medical leave within two weeks. I went back just before Christmas, and thus started the most turbulent and momentous three months of my life.

[ This series of essays is a meditation on the last days of my mother's life and the blessed time I was able to spend taking care of her. It seeks to shine a light on the last days of a great soul - on lessons learned, health, family, relationships, love and hardship. ]

[ The above Tamil poems were written by Amma sometime in 2014. English translations are included here as well. ]
0 Comments

எது பக்குவம்?

10/10/2015

0 Comments

 
Picture
Picture
[Click handwritten text above to enlarge]
எது பக்குவம்?
    -- கா. காந்திமதி

பிறப்பில் வருவது பக்குவமா
இறப்பில் வருவது பக்குவமா

தன்னை அறிவது பக்குவமா
பிறரை அறிவது பக்குவமா

வாழ்வில் கிடைப்பது பக்குவமா
தாழ்வில் கிடைப்பது பக்குவமா

புகழ்வில் வருவது பக்குவமா
இகழ்வில் வருவது பக்குவமா

பெருமையில் வருவது பக்குவமா
சிறுமையில் வருவது பக்குவமா

அறிவால் வருவது பக்குவமா
அன்பால் வருவது பக்குவமா

தெரிவில் வருவது பக்குவமா
தெளிவில் வருவது பக்குவமா

வயதால் வருவது பக்குவமா
இயல்பாய் வருவது பக்குவமா

முனைப்பில் வருவது பக்குவமா
இமைப்பில் வருவது பக்குவமா

பண்பால் வருவது பக்குவமா
பழியால் வருவது பக்குவமா

விதியால் வருவது பக்குவமா
மதியால் வருவது பக்குவமா

இன்பத்தில் விளைவது பக்குவமா
துன்பத்தில் விளைவது பக்குவமா

உண்மையில் விளைவது பக்குவமா
உணர்வில் விளைவது பக்குவமா

உறவில் விளைவது பக்குவமா
துறவில் விளைவது பக்குவமா

ஒன்றால் வருவது பக்குவமா
பலவால் வருவது பக்குவமா

சிந்திக்கத் தொடங்கு இப்போது 
பக்குவம் வருவது எப்போது 
0 Comments

தீரன் (Theerun)

25/7/2015

0 Comments

 
July 27 is the birthday of Theerun, the second grandson of Dr. Kanthimathi (her younger son Aravinth's son). Theerun turns five this year (2015). "Theerun" (தீரன் in Tamil) means "brave one". The name was one of many shortlisted by his grandmother, who was very adept at selecting classical Tamil names with evergreen relevance. She loved Theerun and his energy, and enjoyed playing with him even over a Skype video call whenever she could. The following was written by her sometime in 2014, the last year of her life. Hitherto unshared, this is an ode to a grandson by a grandmother who now watches over him everyday. 
Happy Birthday, little Theerun. 

(Tamil original followed by English translation below.)

தீரன்
கண்ணுக்குள் ஆடுகிறான்
கருத்தினிலே உலவுகிறான்
(எண்ணத்தில்)
கனவிலே வருகிறான்
நினைவிலே விளையாடுகிறான்
மின்னலெனத் தோன்றுகிறான்
இடியாய் முழங்குகிறான்
வில்லாய் வளைகின்றான்
அலையாய்த் தவழ்கின்றான்
கயலாய்த் துள்ளுகிறான்
புள்ளி மானாய் ஓடுகின்றான்
தனிமை தவிர்க்கின்றான்
தலைமை விரும்புகிறான்
தீரனாய் இருக்கின்றான்.
Theerun 
(English translation)
In my eye, he dances
In my thoughts, he roams
In my dreams, he wanders
In my memories, he plays
Like lightning, he appears
Like thunder, he speaks
Like a bow, he bends
Like a wave, he rolls
Like a fish, he jumps
Like a deer, he runs
Loneliness, he avoids
Leadership, he likes
Theerun, he is.
Picture
Picture
Picture
0 Comments

உனக்குள் என்ன தேடுகிறாய்?

26/6/2015

0 Comments

 
Picture

Picture
[Click handwritten text above to enlarge]
உனக்குள் என்ன தேடுகிறாய்?
    -- கா. காந்திமதி

ஒரு கன்னத்தில் அறைபவனிடம் மறு கன்னத்தைக் காட்ட
           நான் ஏசுவல்ல 
உண்ணா நோன்பிருந்து உயிரையும் தியாகம் செய்ய 
           நான் காந்தியல்ல 
அரசைத் துறந்து துறவை நாட நான் புத்தருமல்ல 
ஏசு, காந்தி, புத்தரை உனக்குள் தேடாமல்
           ஏன் அடுத்தவனிடம் தேடுகிறாய்?
0 Comments

காலம்

31/5/2015

2 Comments

 
[This is the first of several Tamil poems written by Dr. K. Kanthimathi that will be presented on this website. Whenever possible, a scan of the original poem written in Dr. Kanthimathi's impeccable handwriting will be displayed along with the typed version.]

Picture
[Click image above to enlarge]
காலம்
    -- கா. காந்திமதி

உறவைப் பகையாக்கும்
பகையை உறவாக்கும்
முள்ளை மலராக்கும்
மலரை முள்ளாக்கும்
மண்ணைப் பொன்னாக்கும்
பொன்னை மண்ணாக்கும்
கல்லைக் கனியாக்கும்
கனியைக் கல்லாக்கும்
சொன்னதை மறக்க வைக்கும்
மறந்ததைச் சொல்ல வைக்கும்
வளர்ந்ததை அழியச் செய்யும்
அழிந்ததை வளரச் செய்யும்
பெருத்ததைச் சிறுக்க வைக்கும்
சிறுத்ததைப் பெருக்க வைக்கும்
கூட்டலும் கழித்தலும் இடம் மாறும்
பெருக்கலும் வகுத்தலும் இடம் மாறும்
மாற்றத்தைக் காண வைக்கும்
கண்டதை மாற வைக்கும்
முடிவில்லாதது காலம்
காலம் கடந்தவர் கடவுள்
2 Comments

    About

    This website is dedicated to the memories, values, talents and personality of Dr. K. Kanthimathi - mother, grandmother, wife, daughter, sister, friend, teacher, poet, artist, chef, and an all-round amazing and loving human being.

    Archives

    February 2025
    May 2021
    February 2020
    February 2019
    January 2019
    May 2018
    January 2018
    August 2017
    May 2017
    February 2017
    January 2017
    November 2016
    August 2016
    July 2016
    April 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015

    Categories

    All
    Aravinth K.
    Arulnambi K.
    Banupriya A.
    Dr. Indira Raghavan
    Kolams
    P. Doraisamy
    Pictures
    Poems
    Recipes
    S. Natarajan
    Tributes

    RSS Feed

Copyright (c) 2015, Kanthimathi.org. All rights reserved.