| | காலம் -- கா. காந்திமதி உறவைப் பகையாக்கும் பகையை உறவாக்கும் முள்ளை மலராக்கும் மலரை முள்ளாக்கும் மண்ணைப் பொன்னாக்கும் பொன்னை மண்ணாக்கும் கல்லைக் கனியாக்கும் கனியைக் கல்லாக்கும் சொன்னதை மறக்க வைக்கும் மறந்ததைச் சொல்ல வைக்கும் வளர்ந்ததை அழியச் செய்யும் அழிந்ததை வளரச் செய்யும் பெருத்ததைச் சிறுக்க வைக்கும் சிறுத்ததைப் பெருக்க வைக்கும் கூட்டலும் கழித்தலும் இடம் மாறும் பெருக்கலும் வகுத்தலும் இடம் மாறும் மாற்றத்தைக் காண வைக்கும் கண்டதை மாற வைக்கும் முடிவில்லாதது காலம் காலம் கடந்தவர் கடவுள் |
|
[This is the first of several Tamil poems written by Dr. K. Kanthimathi that will be presented on this website. Whenever possible, a scan of the original poem written in Dr. Kanthimathi's impeccable handwriting will be displayed along with the typed version.]
2 Comments
JC
30/5/2015 02:14:01 pm
Impeccable writing.....you say. Wow ! How can you dispute that. Even I could understand every word she describes in this poem. What a God given gift she had. I miss her. Miss her a lot.
Reply
தங்கம்
30/5/2015 04:09:48 pm
மிக அருமையான கவிதை !
Reply
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
AboutThis website is dedicated to the memories, values, talents and personality of Dr. K. Kanthimathi - mother, grandmother, wife, daughter, sister, friend, teacher, poet, artist, chef, and an all-round amazing and loving human being. Categories
All
|
RSS Feed